திரைப்படத்தின் ஜீவாதாரமே திரைக்கதைதான்! மற்ற அம்சங்கள் அனைத்தும் இரண்டாம்பட்சம் தான். எந்த அளவுக்கு திரைக்கதை நேர்த்தியுடன் கையாளப்பட்டிருக்கிறது என்பதை பொறுத்தே ஓவ்வொரு படத்தின் தலையெழுத்தும் அமைகிறது. பிரம்மாண்ட வெளிநாட்டு பாடல் காட்சிகளும் இன்னபிற அனாவசிய அமசங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கும் படங்களுக்கு மத்தியில் எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி வெளிவந்து , வியக்கத்தக்க வெற்றியைப் பெற்ற படம்-சேது. இப்படத்தின் வெற்றிக்கு பிரதான காரணம். தடம் மாறி செல்லாத கதையின் போக்கு எனும் நேர்க்கோட்டில் சொல்லப்பட்ட திரைக்கதை! ஐந்து நிமிடங்கள் ஒரே இடத்தில் கதை நிகழ்வது ஆபத்தான விஷயம் என்பதாக ஒரு அச்சம் நிலவிக் கொண்டிருக்கிறது திரையுலகில். அப்படி நிகழ்ந்தால் கதையோட்டம் பாதிக்கப்பட்டு வெற்றி கை நழுவி போகும் என்று அவசியமற்ற காட்சிகளை இடையில் இட்டு நிரப்புகின்றனர். இந்த அச்ச மரபை உடைத்தெறிந்தது சேது படம். சேதுவில் பாண்டிமடம் தொடர்பான காட்சிகள் சுமார் நாற்பத்தைந்து நிமிடங்கள் இடம் பெற்றிருக்கின்றன. பாண்டிமடக் காட்சிகள் படத்திற்கு பாதகமாகவில்லை. மாறாக, படத்தின் வெற்றிக்கு உதவி இருக்கின்றன. இயக்குனர் பாலாவின் நம்பிக்கைக்குக் கிடைத்த பரிசு. சேது திரைக்கதை திரையுலகில் நுழைந்து நல்ல திரைப்படத்தை தர விரும்பும் இளைஞர்களுக்கு உதவுவது நிச்சயம். மற்றவர்களுக்கு சுவாரஸ்யமான நாவல்.
Be the first to rate this book.