ரவிக்குமார் புத்தகம் வெளியிடும்போதும், விமர்சனக் கூட்டம் நடத்தும்போதும், என்னைக் கூப்பிடுவார். நானும் போவேன். அந்த நிகழ்வுகளில் புத்தகங்கள் குறித்து நான் எழுதிப் படித்த கட்டுரை நூல்தான், ‘செத்துப் போகாத சொற்கள்’. ரவிக்குமார் எழுதிய ஒன்பது நூல்களுக்கு நான் விமர்சனம் எழுதியிருக்கிறேன். வேறெந்த எழுத்தாளருக்கும் நான் இத்தனை விமர்சனக் கட்டுரைகள் எழுதியதில்லை. ‘வலசைப் பறவை’, ‘மாமிசம்’, ‘மழை மரம்’, ‘பாப் மார்லி’, ‘சோளி க்கே பீச்சே’, ‘கல்வியே செல்வம்’, ‘கடல் கிணறு’, ‘கற்றணைத்தூறும்’, ‘துயரத்தின் மேல் படியும் துயரம்’ என்று ஒன்பது நூல்களை ரவிக்குமார் எழுதியிருக்காவிட்டால், மணற்கேணி என்ற பத்திரிகையைத் தொடங்கி, தொடர்ந்து நடத்தியிருக்கவிட்டால் நான் இத்தனை கட்டுரைகளை எழுதியிருக்க மாட்டேன். ரவிக்குமார் எழுதிய நூல்களை நான் வெறும் புத்தகங்களாகப் பார்க்கவில்லை. அதன்வழியாக நான் படித்ததென்ன, அறிந்ததென்ன, புரிந்துகொண்டதென்ன என்பதைத்தான் நான் இந்தக் கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். இலக்கியம் பற்றி பேசுவது, எழுதுவது, படிப்பது, என இந்த மூன்று காரியத்துக்காகப் பத்திரிகை நடத்துவது ரவிக்குமாருக்கு மோஸ்தர் அல்ல; பழக்கதோஷமல்ல. வாழ்க்கை, உயிர்நாடி. நான் புதியபுதிய உலகங்களை அறியவும், அறிந்ததைப் பற்றி எழுதவும் வைத்த ரவிக்குமாருக்கு என்னுடைய நன்றி.
– இமையம்
Be the first to rate this book.