மனிதன் உணவு சாப்பிடத் தொடங்கியபோதே செரிமானத்துக்கான உறுப்புகள் இயங்க ஆரம்பித்தன. வாய், பற்கள், உணவுக் குழாய், சிறுகுடல், பெருங்குடல், கணையம் போன்ற பல உறுப்புகள் செரிமானத்துக்கானவை. இந்த உறுப்புகள் உணவை சரியாய் உள்வாங்கி தேவையானவற்றை எடுத்துக்கொண்டு தேவையற்றதை வெளியேற்றும் பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கின்றன. உயிர்வாழ இன்றியமையாதது உணவு மட்டுமே, மனிதன் உயிர் வாழ சக்தியைப் பெற சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். சுவைக்காக மட்டும் அல்ல.. சத்தானதாகவும், உறுப்புகள் சீராக இயங்கவும் ஆரோக்கியத்துக்கு ஏற்றதாக இருப்பது அவசியம்.
நம் பழந்தமிழர் உணவு முறைகள் அற்புதமானவை. ஒவ்வோர் உணவையும் செரிமானத்துக்கு ஏற்ற வகையில் எந்த முறையில் சமைக்க வேண்டும் என்பதை உணர்ந்து சமைத்தவர்கள் அவர்கள். ஒருவர் உணவை மெல்லாமல் விழுங்கினால் செரிமான மண்டலம் ஓயாமல் இயங்கும் நிலை ஏற்படுகிறது. இதனால், செரிமான உறுப்புகள் விரைவில் பாதிப்படைவதோடு நம் அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமல் தடைபடும். சாப்பிடுவதில் நேர ஒழுங்கின்மை, ஏதாவது ஒரு வேளை அதிகமாகச் சாப்பிடுவது, ஒரு வேளை முற்றிலுமாக உணவைப் புறக்கணிப்பது போன்றவை, உடல் உபாதைகளை ஏற்படுத்தும். செரிமானப் பணி எப்படி நடைபெறுகிறது? எந்த உணவைத் தவிர்த்து எந்தெந்த உணவை உண்ண வேண்டும்... என செரிமானம் குறித்த பல கேள்விகளுக்குப் பதில் கூறியிருக்கிறார் டாக்டர் பா.பாசுமணி.
அளவான எடை, சத்தான உணவு, சரியான பொசிஷனில் படுத்து உறங்குவது என மூன்று விஷயங்களை கடைப்பிடித்தாலே செரிமானக் கோளாறைத் தவிர்க்கலாம். இதுபோன்ற செரிமானத்துக்கான செய்திகளை உள்ளடக்கி டாக்டர் விகடனில் ‘இனி எல்லாம் சுகமே’ எனும் பெயரில் வெளியான தொடர், ‘செரிமானம் அறிவோம்’ எனும் தலைப்பில் நூல் வடிவம் பெற்று இப்போது உங்கள் கைகளில்...
Be the first to rate this book.