பழந்தமிழரின் இயற்கையோடு இயைந்த பெருவாழ்வில் ஊடாடி, உறவாடி, காத்து, இனத்தையும் செந்தமிழையும் வளர்த்தவன் முருகன். அதனாலேயே அழகுக் கடவுளாக உறையும் முருகனைத் தமிழ்க் கடவுளாகக் கொண்டனர் பைந்தமிழர். அருட்கவி அருணகிரி ''முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான் முருகன்'' என்பார். செந்தமிழ் மக்கள் இறைவழிபாட்டில் தோய்ந்த மனத்தினர். சைவ நெறியாம் சிவநெறியும், அன்புநெறியும் பன்னெடுங் காலமாக இந்தத் தமிழ் மண்ணில் ஆழங்கால்பதித்து வந்துள்ளன. இது வரலாற்றுச் செய்தி.
Be the first to rate this book.