பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாராயண கோன் என்பவர் எழுதிய 'கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தாரா சரிதம்' என்ற நூலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபின்படி, மதராஸ் அரசின் வசமுள்ள மெக்கென்ஸி கையெழுத்துப் படிவங்களும் செஞ்சிக்கு முன்பு கிருஷ்ணபுரம் என்ற பெயர் இருந்த செய்தியைத் தெரிவிக்கின்றன. இந்தப் பெயர் முதன்முதலாகச் செஞ்சியை ஆண்ட அரச வம்சத்தால் வழங்கப்பட்டிருக்கலாம். முதன்முதலாகச் செஞ்சியை ஆண்ட அரச வம்சத்தினர் கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்ட இடையர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் அல்லது செஞ்சியை ஆண்ட வலிமைமிக்க அரசர் கிருஷ்ணப்ப நாயக்கரின் பெயரால் கிருஷ்ணபுரம் என்ற பெயர் வந்திருக்கக்கூடும்.
Be the first to rate this book.