‘ஆஹா! அக்காலம் மீண்டும் வராதா’ என்று நமக்கு ஏற்படும் ஆதங்கம் இயற்கையானது. உமரைப் போன்ற மிகச் சிறந்த ஆட்சியாளர் அமைய வேண்டும் என்று நம் ஒவ்வொருவருக்கும் அளவற்ற ஆசை ஏற்படுவதும் நியாயமான ஆசைதான். ஆனால்,
சிறந்த ஆட்சியாளர் வேண்டும் என்ற பேராவல் நமக்கு இருக்கிறதே ஒழிய, நாம் இறைவனுக்கு அஞ்சிய சிறந்த குடிமக்களாக இருப்பதற்கான எவ்விதத் தகுதியையும் ஒழுக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள முயல்வதில்லை. அந்த முதல் தலைமுறை கலீஃபாக்கள்போல் நமக்கு ஆட்சியாளர்கள் வேண்டும் என்று விரும்பும் நாம், குடிமக்களுக்கான இலக்கணமாய்த் திகழ்ந்த தோழர்களைப் போல் மாறவில்லை.
மாற்றம் நிகழ வேண்டும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் மெய்மாற்றம் நிகழ வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம்.
Be the first to rate this book.