கட்சி கமிட்டியில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து, காரசாரமான விவாதம் நடப்பது உண்டு. அந்த விவாதங்களை பொறுமையாகக் கேட்டு உரிய முறையில் பொருத்தமான பதில்களை அவர் அளிப்பார். அந்தக் காரசாரத்தை அத்தோடு அவர் மறந்துவிடுவார். மாறுபட்ட கருத்துகளை உள்வாங்கிக் கொள்வார். அவருடன் எந்தத் தோழராக இருந்தாலும் உரிமையோடு பேசலாம். உரிமையோடு விமர்சிக்கலாம். அதேபோல அவரும் நம்மீது உரிமை எடுத்துக்கொண்டு பேசுவார். தோழமை என்பதன் சிறந்த இலக்கணமாக அவர் திகழ்ந்தார்.
Be the first to rate this book.