ஏன் சேமிக்க வேண்டும், ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பது தொடங்கி அனைத்துவிதமான முதலீட்டுத் திட்டங்களின் சாதக பாதகங்களையும், வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்.டி, தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் தங்க முதலீட்டுத் திட்டங்கள், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது இந்த நூல். அனைவராலும் விரும்பப்படும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் முதலீடு என்றால் மியூச்சுவல் ஃபண்ட்தான். அதைப் பற்றி மட்டுமே பத்து அத்தியாயங்கள் இந்த நூலில் விரிவாக இடம்பெற்றிருக்கிறது. அனைத்து நிதித் தேவைகளுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்படிப் பயன்படுத்துவது, மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் என்னென்ன என்பதைப் பற்றி தகுந்த உதாரணங்களுடன் எடுத்துக்காட்டுகிறது இந்த நூல். நாணயம் விகடன் வார இதழில் சேமிப்பும் முதலீடும் எனும் தலைப்பில் தொடராக வெளிவந்த கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றிருக்கிறது. குறுகிய காலம், நடுத்தரக் காலம், நீண்ட காலத்துக்கு எந்த மாதிரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும், ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப எந்தத் திட்டங்கள் சரியாக இருக்கும் என்பதையும், முதலீட்டைப் பாதுகாக்கும் அவசர கால நிதி, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பற்றியும், முதலீட்டை சரியாகத் தேர்வு எப்படி என்பதையும் உதாரணங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். சேமிப்பையும் முதலீட்டையும் சரியான திட்டமிடலுடன் செய்தால் நிறைவான, நிம்மதியான வாழ்க்கை நிச்சயம் என்பதை எடுத்துக்கூறுகிறது இந்த நூல்.
Be the first to rate this book.