நம்மிடையே நிதி மற்றும் முதலீடு பற்றிய அறிவு பொதுவாக மிகவும் குறைவாகவே உள்ளது. ஆகவே, அது பற்றி எதுவும் தெரியாத அனைவருக்கும் இந்த நூல் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
இந்த நூலில் திரு இரா. பூரணலிங்கம் நிதி மற்றும் முதலீடு பற்றிய அடிப்படைகளை எளிய முறையில் விளக்கியுள்ளார். நீங்கள் முதல் வேலையில் சேர்ந்து, வாழ்க்கைப் பயணத்தை ஆரம்பிப்பவராக இருக்கலாம்; அல்லது மாதாமாதம் சேமித்து, அதை முதலீடு செய்ய எண்ணும் இல்லத்தரசியாக இருக்கலாம்; அல்லது பிற்காலத் தேவைக்கு முதலீடு செய்ய நினைக்கும் நடுத்தர வயதினராக இருக்கலாம். யாராய் இருந்தாலும், அவர்கள் அனைவருக்கும் பயனளிக்கும் அரிய நூல் இது. குறிப்பாக, முதலீடு பற்றி அறிந்து, முதலீடு செய்ய நினைக்கும், ஆனால், எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவிக்கும் இல்லத்தரசிகள் பெரும் பயனடைவர்; சேமித்ததைப் பெருக்க நல்ல முறையில் முதலீடு செய்ய நினைக்கும் இல்லத்தரசிகளும் பயனடைவர். சேமிக்கும் பழக்கத்தை முடிந்தவரை ஆரம்பத்திலேயே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர் அறிவுறுத்துகிறார். நீங்கள் வாழ்க்கைப் படியில் அடிவைக்கும்போதே செலவு பட்ஜெட் ஒன்றைத் தயார்செய்து, செலவை வருமானத்திற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்குகிறார். வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பிற்காக ஒதுக்க வேண்டும் என்கிறார். சேமிப்பை “சிறிதாகத் தொடங்கு” என்று எழுதுகிறார். அதேபோல் சேமித்த பணத்தை சீரிய முறையில் முதலீடு செய்வது எவ்வளவு அவசியம் என்பதையும் வலியுறுத்துகிறார்.
Be the first to rate this book.