சொந்த ஊர் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி.திண்டுக்களில் வசித்து வருகிறார். பொறியியல் பட்டதாரி. தற்போது திரைப்படத் துறையில் Visual Editor ஆக பணியாற்றி வருகிறார்.
முன் நம் காலத்தில் பல்வேறு நீதி கதைகளின் காரணமாக அஞ்சி தவறவிட்டதை கண்டுபிடித்தவன் இப்பிரதிகளின் படைப்பாளியான லட்சுமிஹர். காலமற்ற இடத்தில் ஒரு மையமற்ற விளையாட்டாகவே நம்மை கடந்து செல்லும் இப்படைப்புகளை ஒருங்கிணைக்கும் இடமாக இயற்கை இயல்பாக கலந்திருக்கிறது. இதற்கு தானே அத்தனை தத்துவங்களும், கோட்பாடுகளும், வரலாறுகளும், அறிவியல் இயக்கங்களும் இவ்வுலகில் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றன. எங்கும் முதல் குருத்துகள் முளைவிட்டு கொண்டிருக்கின்றன. ஆசிரியர்க்கு இது முதல் தொகுப்பெனினும் அப்பாலும் இப்பாலும் நகரும் இக்கதைகள் தமிழுக்குப் புதியது.
ஒரு வாசிப்பனுபவத்தின் வழியாக கேள்விகளும் பதிலும் அற்றுப் போவது, கடந்தகால அரூபங்களுடன் உரையாடுவது அல்லது மேலோட்டமாய் மிதப்பது அல்லது பிரதிகளில் இன்பம் காணுவது என நீளும் இக்கதைகளை வாசியுங்கள். ஏற்கனவே நீங்கள் கொண்டுள்ள அர்த்தங்களை இழந்து வாசியுங்கள். இச்சிறுகதையாசிரியர் தொடர்ந்து எழுதி கதை புலத்தில் வளர என்னுடைய அன்பு வாழ்த்துக்கள்.
- யவனிகா ஸ்ரீராம்
Be the first to rate this book.