1. காதலின் நாற்பது விதிகள் (ஸூஃபி நாவல்) - எலிஃப் ஷஃபாக்
உலகப் புகழ்பெற்ற The Forty Rules of Love நூலின் மொழியாக்கம்.
தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன.
- தி டைம்ஸ் (இங்கிலாந்து)
தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸூஃபி ஞானிகளான ரூமிக்கும் ஷம்ஸி தப்ரேஸுக்கும் இடையில் நிகழ்கிறது. இவ்விரு கதையாடல்கள் கொள்ளும் குறுக்கீட்டில் சுயம், சுயமின்மை, இறைவனுக்கான அர்ப்பணம் ஆகியவை குறித்த முக்கியமான போதனைகள் வெளிப்படுகின்றன.
- ஆல்ட்முஸ்லிமா.காம்
காதலின் நாற்பது விதிகள் வாசியுங்கள். நீங்கள் உங்களின் இதயத்தைத் திறக்கலாம், தடைப்பட்டுக் கிடக்கும் இடங்களைத் தகர்த்து வெளிப்படலாம், மாயமான முறையில் காதலில் விழலாம், விடுதலையின் ஆழமான ஆனந்தத்தை உணரலாம்.
- ஜாக் கார்ன்ஃபீல்டு
2. ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்) - இர்விங் கர்ஷ்மார்
Master of the Jinn என்ற ஸூஃபி த்ரில்லர் நாவலின் மொழிபெயர்ப்பு.
இதோ, இதயத்தின் பாதையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கதை. ஓர் ஆன்மீக சாகசப் பயணம். ஸூஃபி வழி பற்றிக் குறியீடாகச் சொல்லும் கற்பனை வளம்.
பாலைவனத்தில் அனிச்சையாகக் கண்டறியப்படும் பொருள் ஒன்று சமகால ஸூஃபி குரு ஒருவரையும், அவருடைய சகாக்கள் ஏழு பேரையும் தொல்லுலகத்துப் பொக்கிஷம் ஒன்றைத் தேடிச்செல்லும் கட்டாயத்தில் வைக்கிறது: பேரரசர் சுலைமானின் மோதிரம். ஆம், ஆயிரமாயிரம் மரபுக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதே முத்திரை மோதிரம்தான். புகையற்ற நெருப்பால் படைக்கப்பட்ட பயங்கர உயிரினமான ஜின்களைக் கட்டுப்படுத்தி ஆட்சி புரிவதற்காக இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட மோதிரம் அது.
ஆனால், தேடிச்செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது அந்தப் பயணம் ஒரு வினோத பாதிப்பை ஏற்படுத்துகிறது: மாயக் காட்சிகள் அவர்களின் கனவுகளிலும் நினைவுகளிலும் ஊடுருவுகின்றன. அவர்களின் இதயங்களில் கண்ணீர் நிரம்புகிறது. மர்மங்கள் மண்டுகின்றன. பூமியைப் புரட்டுவதுபோன்ற புயல்கள்; முடியப்போவதே இல்லை என்பதுபோன்ற இரவுகள்; மண்ணுக்குள் எப்போதோ தொலைந்த தொல் நகரம்; மேலும், ஜீவ நெருப்பால் ஆன ஜின்கள்.
இறுதியில், அந்தப் பயணம் ஜின்களின் விதியை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அன்பின் வழியையும் இறைவனின் அளப்பரிய கருணையையும் வெளிப்படுத்துகிறது.
Be the first to rate this book.