1. மனம் என்னும் மாயநதி - ஷாஹுல் ஹமீது உமரீ
சிலர் நுண்ணுணர்வுகள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் எழுத்தாற்றலும் வாய்க்கப்பெற்றவர்களாக இருந்தால் அது அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிடுகிறது. நானும் நுண்ணுணர்வுகள் கொண்டவன்தான். என்னுள் நிகழும் மாற்றங்களை, என்னைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளை, நான் காணும் மனிதர்களை மிக உன்னிப்பாகக் கவனிக்கிறேன். நான் காணும் இந்தப் பரந்த வெளியும் நான் வாசிக்கும் புத்தகங்களும் எனக்கு எதையோ சொல்லிக்கொண்டே இருக்கின்றன. நான் உணர்வதை என் எழுத்தின் வழியாக வெளிப்படுத்த முயல்கிறேன்.
- ஷாஹுல் ஹமீது உமரீ
2. உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்! - முஹம்மது அல்கஸ்ஸாலி
‘ஜத்திது ஹயாத்தக’ நூலின் மொழியாக்கம்.
கண்ணியமும் வெற்றியும் விளைச்சலும் மனிதர்களின் உள்ளங்களில் இனிமையான கனவுகளாக மட்டுமே இருக்கும். அவற்றுக்காகச் செயல்படக்கூடியவர்கள் தங்களின் ஆன்மாவை அவற்றில் ஊதினால் மட்டுமே, இவ்வுலகில் இருக்கும் உணர்வோடும் செயல்பாட்டோடும் அவற்றை அடைந்தால் மட்டுமே அவை உயிரோட்டம் ததும்பிய உண்மைகளாக மாற்றமடையும்.
- முஹம்மது அல்கஸ்ஸாலி
3. உடல் எனும் ஞானி (பாகம் 1) - நாகூர் ரூமி
4. உடல் எனும் ஞானி (பாகம் 2) - நாகூர் ரூமி
மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்பது முதுமொழி. இன்னொன்றும் சேர்த்துச் சொல்லலாம். மனமது செம்மையானால் மருந்துகள் தேவையில்லை. ஆமாம். கோடிகோடியாகப் பணம், தொழில் நுட்ப வசதிகள் என எல்லாம் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்ந்து பயனில்லை. அந்த ஆரோக்கியத்தின் ரகசியம் மனம்தான் என்பதையும், ஞானியை வெளியே தேடவேண்டியதில்லை, நம் உடலும் ஒரு ஞானிதான் என்பதையும், மனமும் உடலும் தனித்துப் பார்க்க முடியாத, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை என்பதையும் ஆதாரங்களோடு நிரூபிக்கிறது நாகூர் ரூமியின் இந்த நூல்.
Be the first to rate this book.