இந்நூலில் வரும் கதைகளில் செல்போன்கள் குற்றங்களை நிரூபிக்கவும், நிரபராதிகளை சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றவும், அவர்களுக்கு ஒரு விடிவெள்ளியாகப் பல்வேறு நிலைகளில், பல்வேறு கோணங்களில், அறிவியல் சார்ந்த சாட்சியங்களாக கையாளப்பட்டுள்ளது. காவல்துறையினர் ஓய்வின்றி தங்கள் கடமைகளை சற்றும் சிரமம் பாராமல் நிறைவேற்றி வருவதால்தான், பொது மக்கள் தங்கள் குடும்பத்தினருடன், அமைதியாகவும், பாதுகாப்புடனும் வாழ முடிகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் காவல்துறையில் நிகழும் ஒரு சில தவறுகள் பன்மடங்கு பூதாகரமாக்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களுக்கும் காவல்துறையின் மேல் நம்பிக்கையின்மையும், போலீஸ்காரர்கள் என்றாலே நேர்மையற்றவர்கள், நியாயமற்றவர்கள் என்று மக்கள் நினைக்குமளவிற்கு சித்தரிக்கப்படுகின்றனர். ஆகவே பொது மக்கள் மனதில், காவல்துறை மீது ஒரு சதவீதமாவது நம்பிக்கையும் மதிப்பும் மேலும் கூட வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த, ‘சீர்கொண்ட செவ்வீரா’ சமுதாயத்திற்கும், பொது மக்களுக்கும், நேர்மையானவனாக, பாகுபாடற்றவனாக, ஊழல் லஞ்சம் இவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்காதவனாக செயல்பட்டு, சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நம் நாட்டில், நீதியை நிலைநாட்ட மேற்கொண்ட உறுதியான பணிகளின் தொகுப்பே இந்நூல்.
Be the first to rate this book.