5000 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த நாகரிகம் சீனர்களுடையது. சீனப்பண்பாடு, அவர்கள் கடைப்பிடிக்கும்
மதங்கள், போற்றப்படும் தத்துவஞானிகள், அவர்களின் கொள்கைகள் அனைத்தையும் சுவாரஸ்யமாகச் சொல்கிறது இந்தப்புத்தகம். கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் ஹிந்து மதங்களின் பாதிப்பு இல்லாத நாடுகள் மிகக்குறைவு. விதிவிலக்காகத் தங்களுக்கென்று பிரத்யேகமான மதங்களைக் கொண்டுள்ள நாடுகளும் சில இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது சீனா. இன்றளவிலும் தங்களுடைய தனித்தன்மையையும் கலாசாரத்தையும் இழக்காமல் தனது சில சொந்த மதங்களைக் கட்டிக் காத்து வருகிறது சீனா. குறிப்பிட்ட அந்த மதங்களின் வேர்கள், சீனாவில்தான் உள்ளன. என்பது மட்டுமின்றி அவை சீனாவைத் தாண்டி வேறு எங்கும் பரவவில்லை என்பதும் அதிசியமானதுதான். சீனாவின் பாரம்பரியமான மதங்களைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும், அந்த மதங்களைப்போற்றிய தத்துவ ஞானிகள் மற்றும் அவர்களின் போதனைகளையும் விரிவாக விளக்குகிறது இந்நூல்.
- ஜனனி.
Be the first to rate this book.