குழந்தைகளின் சிந்தனைப் போக்கின் தடங்களாக இவற்றை நாம் வாசிக்க முடியும். குழந்தைகள் எப்படிச் சிந்திக்கிறார்கள் என்பதைப் படம் பிடிக்கும் பல பக்கங்கள் இந்நூலில் உள்ளன.
மாண்டிசோரியின் குழந்தைகளின் உளவியல் ஆய்வுபோன்ற ஓர் ஆய்வுக்கான தரவுகளைத் தேனி சுந்தர் நமக்குத் தந்திருக்கிறார் என்றே கருதுகிறேன். இதுபோலப் பலரும் தங்கள் குழந்தைகளின் உரையாடல்களைப் பதிவு செய்தால் ஆய்வுக்கான முக்கிய ஆவணங்களாக அவை உதவக்கூடும். குறிப்பாகப் பெண்கள் தங்கள் குழந்தைகளுடனான உரையாடல்களைப் பதிவு செய்ய வேண்டும். தேனி சுந்தர் முதல் தப்படியை எடுத்து வைத்திருக்கிறார்.
Be the first to rate this book.