வணிகத்துறையாக மருத்துவத்துறை மாறியிருக்கும் இச்சூழலில் இப்புத்தகம் முக்கியத்துவம் பெறுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நோய்கள் மனிதர்களை தாக்கிக் கொண்டிருக்கின்றன. எப்படி குணமாவது என்று தெரியாமல் மக்கள் தவிக்கிறார்கள். அவர்களைக் குழப்புவதற்கு என்றே அலோபதி, சித்தா, ஹோமியோபதி, ஆயுர்வேதம், அது, இது என ஒவ்வொரு மருத்துவப் பிரிவும் ஒவ்வொரு மருந்தை சிபாரிசு செய்கின்றன. ஒவ்வொரு நோய் குறித்தும் ஒவ்வொரு தகவலைச் சொல்கின்றன. இவற்றில் எதை நம்புவது என்று தெரியாமல் எல்லாத் தரப்பையும் நம்பி, அனைத்து மருத்துவர்களையும் சந்தித்து, சகல மருந்துகளையும் உட்கொண்டு மக்கள் வாழ்கிறார்கள். இந்த அறியாமையைத்தான் இந்நூல் போக்குகிறது.
Be the first to rate this book.