அடிமைத்தனம் கொடிது என்றால் அதை சகித்துக் கொண்டு வாழ்வதென்பது பெரிதும் கொடிது!
இந்திய முஸ்லிம்கள் உடலளவில் அடிமைப் பட்டுக் கிடப்பதைக் காட்டிலும் சிந்தனை அளவில் அடிமைப்பட்டு சிதைந்து கிடப்பதுதான் பெரு வேதனை.
700 ஆண்டுகள் இந்நாட்டை முஸ்லிம்கள் ஆண்டார்கள். ஆனால், காலச் சுழற்சியினாலும் கண்களுக்கு முன்னால் தடதட வென நிகழ்கின்ற மாற்றங்களைக் கண்டு திகைத்துத் தடுமாறிப் போனதாலும் கடந்த கால வரலாற்றை முற்றிலும் மறந்துபோய் அந்த சுவடுகளையும் துடைத்தெறிந்து விட்டோம்!
மறுபக்கம் பார்த்தால் நகர்வோ சலனமோ அறவே இல்லாத ‘தேக்க நிலை!’
அதற்கு இணையாக இன்னொரு ‘செயலின் மையை’ வரலாற்றில் இருந்து உருவியெடுத்து யாராலும் காட்டவே முடியாது.
இதன் விளைவாக, முஸ்லிம்கள் இழந்த பெருமையை மீட்டெடுப்பதற்காக தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாது ஈந்தத் தயாரானவர்களின் பெயர்களைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள நாம் தவறிவிட்டோம்.
வரலாற்றில் நமக்கான அடையாளத்தை அழுத்தமாக பதித்துச் சென்றவர்கள் யார்? என்பதும் தெரியாது. அவர்களைப் பற்றி நமக்கு தெரியவே இல்லையே என்பதை எண்ணி வெட்கமும் நமக்கு ஏற்படுவது கிடையாது!
Be the first to rate this book.