இரண்டாம் உலகப் போரின் போது பாசிச ஜப்பானின் பிடியில் சிக்கித் தங்களது உயிரை இழந்த பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் வரலாற்றில் ஒரு துளி.
இந்நிகழ்விற்கும் இந்தியா – மலேசியத் தமிழர்களுக்குமிடையே நெருங்கிய தொடர்புண்டு, இவ்வரலாற்று நிகழ்வில் தமிழர்கள் எதிர் கொண்ட இன்னல்களும் ஒழப்புகளுக்கும் அளவேயில்லை.. உயிரிழப்பு,உறவிழப்பு, பொருளிழப்பு, எனப் பன்முக இழப்புகளைத் தமிழர்கள் எதிர்கொண்டுள்ளனர். அந்த இழப்புகளின் வெம்மையை இன்றளவும் காணமுடிகிறது. சற்றேறத்தாழ எழுபது, எண்பது அகவையைக் கடந்த பெரியவர்கள் தம் இழப்புகளை நினைவுகூரும்போது. தமிழனின் வரலாற்றுப் பக்கங்களில் கரும்புள்ளிகள் பல சிதறிக்கிடப்பதை உணர முடிகிறது.
சாலையோரத்தில் நடந்துபோய்க் கொண்டிருந்தவர்களை இழுத்து வண்டியில் ஏற்றி, சயாமுக்குக் கொண்டு சென்றனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை இன்றளவும் அளவிடவும் முடியவில்லை
Be the first to rate this book.