சயாம் பர்மா மரண இரயில்பாதைத் திட்டம் தொடர்பாகப் பல ஆண்டுகள் ஆய்வுசெய்து இந்நூலைக் கொண்டு வந்துள்ளார். சயாம் பர்மா தொடர் வண்டிப் பாதை உருவாக்கப்பட்ட வரலாற்றுக் குறிப்புகளும் கட்டுமானத்தில் வேலைசெய்த தொழிலாளர்களின் நேர்காணலும் ஒளிப்படங்களும் இந் நூலில் தரப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப்போர் பின்னணியுடன் இந்த இரயில்பாதைத் திட்டத்துக்கு உள்ள தொடர்பைக் கோர்வையாகச் சொல்லியுள்ளார். இத்திட்டம் தொடர்பாக தமிழில் வெளிவந்துள்ள முதல் வரலாற்று நூல் என்ற பெருமைக்குரியது. இதன் ஆசிரியர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியராகவும், மலேசிய தேசியப் பல்கலைக் கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
சுருக்கமாகச் சொல்வதெனில் சயாம் -பர்மா மரண இரயில்பாதைத் திட்டம் என்பது இருபதாம் நூற்றாண்டில் தமிழர்கள் சந்தித்த இன்னொரு முள்ளி வாய்க்கால். படிக்கும் எவரது மனத்தையும் உறைய வைக்கும் நூல். இன்றும் உயிரோடு உள்ள, அகவை எண்பதை எட்டியுள்ள இருபது பேரின் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் இருக்க வேண்டிய வரலாற்றுப் பெட்டகம்.
Be the first to rate this book.