பல ஆண்டுகாலம் பாசாங்கு செய்து பசப்பி வந்தாலும் கடைசியாகத் தனிமனித வழிபாட்டு வடிவமாக விநாயக் தாமோதர் சவார்கரை பாரதிய ஜனதா கட்சி வெளிப்படையாக ஒப்புக் கொண்டு விட்டது. இந்திய தேசியத்தின் அடையாளமாக விளங்கும் மகாத்மா காந்தியின் இடத்தில் சவார்க்கரை வைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். சொந்தக்காரரான சவார்க்கரை பற்றி பல ஆய்வுத் தகவல்களைக் கொண்டது இந்நூல். ஒன்றுக்கு மேற்பட்ட கொலையில் அவருக்கு நேரடித் தொடர்பு உண்டு. அவர் பலமுறை அரசிடம் எழுத்து பூர்வமாகவே மன்னிப்புக் கோரியவர். 1948ல் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கான சதிக்கு இவர் தலைமை தாங்கியதை இந்த நூல் விளக்குகிறது. அரிய தகவல்களையும் கொண்டுள்ள ஏ.ஜி.நூரணியின் இந்த நூல் தற்கால அரசியலையும் இந்தியாவில் வகுப்புவாதம் வளர்ந்த வரலாற்றையும் விவரிக்கிறது.
Be the first to rate this book.