உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்தியஜித் ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது.
துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து பல புதிய சாத்தியங்களை உருவாக்கியவர் சத்யஜித் ரே. 1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய கதைகள் பெங்காலியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. முதல் முறையாக, சத்யஜித் ரேயின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன.
இந்தக் கதைகளின் நாயகன் ஃபெலுடா. அசாத்திய புத்திக்கூர்மை; தெளிவான சிந்தனை வீச்சு; குழப்பமான மர்ம முடிச்சுகளையும் திறம்பட அவிழ்க்கும் திறன். வங்காள இலக்கியத்தின் ஷெர்லக் ஹோம்ஸ் என்று ஃபெலுடாவைத் தாராளமாக அழைக்கலாம். தவிரவும், வேறெந்தத் துப்பறியும் நிபுணரிடமும் காணக்கிடைக்காத கூடுதல் திறன் ஃபெலுடாவுக்கு உண்டு. மெல்லிய நகைச்சுவை உணர்வு.
டார்ஜிலிங்கில் ஆபத்து!
புராதனப் பொருள்கள் மீது அபரிமிதமான காதல் அவருக்கு. தானுண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர். எங்கிருந்தோ வந்து சேர்கிறது அந்த மிரட்டல் கடுதாசி. யார் அனுப்பியிருப்பார்கள்? யாரைச் சந்தேகப்படுவது? நண்பர்களையா? உடன் இருப்பவர்களையா?
ஜிலீர் பிரதேசம். இறுகும் மர்ம முடிச்சு. விடை தேட ஆரம்பிக்கிற நூல் ஃபெலுடா. பதைக்கப் பதைக்கப் படித்துப் பாருங்கள்!
Be the first to rate this book.