ரேயின் திரைப்படங்களைப் போலவே அவர் எழுதியுள்ள நூல்களிலும் அவருடைய கலை மேதைமையும், வரலாற்று உணர்வும், அறச்சீற்றமும் வெளிப்பட்டு நிற்கின்றன. இளம் வயதிலேயே துப்பறியும் கதைகளில், குறிப்பாக ஷெர்லாக் ஹோம்ஸ் நாவல்களில் மிகுந்த ஈடுபாடுடைய வாசகராக ரே இருந்திருக்கிறார். இதே சாயலில் வங்காள ஷெர்லாக் ஹோம்ஸ் ஒருவரை ஃபெலுடா என்ற பெயரில் படைத்து 35 துப்பறியும் நாவல்களை ரே எழுதியிருக்கிறார். இவற்றில் 20 கதைகள் தற்போது புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியீடாக நூல் வடிவம் பெற்றுள்ளன. தமிழில் இவற்றை மொழிபெயர்த் திருப்பவர் வீ.பா.கணேசன்.
தொகுப்பிலுள்ள நூல்கள்:
1. அனுபிஸ் மர்மம்
2. கல்லறை ரகசியம்
3. காத்மாண்டு கொள்ளையர்கள்
4. கைலாஷில் ஒரு கொலையாளி
5. கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்
6. தங்கக் கோட்டை
7. தேவியின் சாபம்
8. நெப்போலியனின் கடிதம்
9. பம்பாய் கொள்ளையர்கள்
10. பிணம் நடந்த மர்மம்
11. பிள்ளையாருக்குப் பின்னே மர்மம்
12. பூட்டிய பணப்பெட்டி
13. மகாராஜாவின் மோதிரம்
14. மரண வீடு
15. மர்மமான ஒரு குடித்தனக்காரர்
16. சாவி
17. கல்கா மெயிலில் நடத்த சம்பவம்
18. கேங்டாக்கில் வந்த கஷ்டம்
19. டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்
20. வங்கப்புலி மர்மம்
Be the first to rate this book.