பதேர் பாஞ்சாலி குறித்தும் எஸ்.எஸ். வாசன் ரேயைச் சந்தித்தது குறித்தும் சுவாரசியமாகத் துவங்கிய இந்தக் கட்டுரைத் தொடர் அப்புவின் முக்கதைகள், சாருலதா, மகாநகர் மற்றும் அவரது கல்கத்தாவின் முக்கதைகள் எனப் படங்களையும் அவற்றின் அழகியலையும், திரைமொழியையும் தீவிரமாக அணுகுகிற கட்டுரைகளாக விரியத் துவங்கியது.
விபூதிபூஷனின் நாவலையும், தாகூரின் போஸ்ட் மேன் சிறுகதையையும் திரைப்படமாக மாற்றும் போது ரே எதையெல்லாம் எடுத்தார் எதையெல்லாம் விடுத்தார் என்ற குறிப்பும், தாகூரின் ‘நஷ்ட நீர்’ என்ற நாவலில் இருக்கும் முடிவை சாருலதாவில் எப்படி மாற்றினார் என்பதும் ஒரு திரை மாணவனுக்கு முக்கியமான பதிவு.
Be the first to rate this book.