‘சட்டி சுட்டது’ உறவுகளைப் பற்றியது. பாசம் மிக்க தந்தை தன் பிள்ளைகளால் பாதிக்கப்படும் அவலத்தை நாவல் பேசுகிறது. 1965இல் எழுதப்பட்டிருந்தாலும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட நிகழ்வுகளை மையமிட்டது நாவல். ஒவ்வொரு உறவும் தன்னிடமிருந்து விலகிப் போகும்போது மௌனமாக அதைச் சகித்து ஏற்றுக்கொள்ளும் சாமிக்கவுண்டர், இந்நாவலின் மையப் பாத்திரம். ஷண்முகசுந்தரம், காந்தியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். வாழ்நாள் முழுக்க அக்கொள்கைகளையே பின்பற்றி வந்தவர். அவருடைய நாவல்களில் காந்தியக் கருத்துகளை வலியுறுத்தியதும் உண்டு. ‘சட்டி சுட்டது’ நாவல் காந்தியத்தில் ஊறிய மனம் ஒன்றின் படைப்பு வெளிப்பாடு எனக் கொள்ளத்தகும்.
4
பெரியசாமி கவுண்டர் தன் மகன்கள் இருவர் மீதும் அளவுகடந்த பாசம் கொண்டவர். மகன்கள் வளர வளர அனைத்து ஒழுக்கமற்ற பழக்கங்கள் கற்று தன் தந்தையிடம் இருந்து விலகி பாசமற்ற பாதையில் செல்ல, மனக்கசப்பு காரணமாக வீட்டை விட்டு வெளியேறி தோட்டத்து சாளையில் தன் மகளுடன் குடியேறிகிறார் அதன் பின் நடக்கும் பாசப் போராட்டமே “சட்டி சுட்டது” ஆர்.ஷண்முகசுந்தரம் அவர்கள் சட்டி சுட்டது நாவல் வழியே சுதந்திரத்துக்கு முற்பட்ட (1940-1946) கொங்கு நாட்டு கிராமதிற்க்கு நம்மை அழைத்துச்செல்லகிறார். சட்டி சுட்டது நாவலில் என்னை கவர்ந்தது பல வசனங்கள் அவற்றில் சில இங்கே, (தயிர் சிலுப்புவதற்கே அந்தக் குழந்தை விடாது. மத்தைக் கையில் பிடித்ததும், தன் அம்மாவைத் தொந்தரவு பண்ண ஆரம்பித்துவிடும். எலுமிச்சங்காய் அளவு வெண்ணெய் கிடைக்குமட்டும் நகராது! வாயில் போட்டுக் குதப்பிக்கொண்டே தாத்தாவின் வெற்றிலைப் பையைத் துளாவ ஆரம்பிக்கும். பேத்திக்கு குச்சி மிட்டாய் வாங்கிவந்து வைத்திருப்பார். சிலநாள் மறந்துவிடுவார். அன்றைக்குப் போச்சு! அப்பச்சியைப் பாடாய் படுத்தி விடுவாள் பேத்தி!) (முத்தாயாள், படிக்குள் போட்டிருந்த கால்படி வேர்க்கடலையையும் அரைவட்டுக் கருப்பட்டியையும் தீர்த்துக் கட்டிவிட்டாள். கொய்யா மரத்தை நோட்டம் விட்டுகொண்டிருந்தாள். உச்சாணிக் கிளையில் அணில் கடித்திருந்த ஒரு பழம் பாதி வடிவில் சிவப்பாக அவள் கண்களில் பட்டது. உடனே தாத்தா ஞாபகம் வந்துவிட்டது சிறுமிக்கு. சொல்வதற்கு முன் சல்லையை எடுத்துக்கொண்டு வந்து தாத்தா பறித்துத் தந்துவிடுவார். இன்றைக்கு பழம் பறிக்கும் சல்லையையும் காணோம், தாத்தனையும் காணோம் !) (செல்லாயாள், எலந்தை மரத்தடியில் குழந்தைகளை நொறுக்கிக்கொண்டிருந்தாள் “உண்ணிமேல் கேக்கறீங்களா? உண்ணி போணா சூடுதான். கரண்டியைக் காச்சி சொரக்கின்னு தொடயிலே சூடு போட்டிருவன்” குழந்தைகள் கிணற்றோரம் போயிருப்பார்கள் அல்லது இலந்தை மரத்தில் ஏறி கையைக் காலைக் கீறிக் கொண்டிருப்பார்கள் என்று முதலில் பழனியப்பன் நினைத்தான். பிறகுதான் சமாசரம் தெரிந்தது. தாத்தனைப் பார்க்க ராம, லட்சுமணர்கள் சொல்லாமல் கொள்ளாமல் போயிருக்குறார்கள். தாத்தன் வீடு இருக்கும் திக்கில் காலெடுத்து வைக்கக்கூடாது என்பது தாயாரின் கட்டளை! குழந்தைகளுக்கு அது மறந்துவிட்டது. வேலாத்தாள், தலை சீவி விட்டிருக்கிறாள். தவிட்டுப் பலாப்பழம் ஆளுக்கு ஒன்று தந்திருக்கிறாள். “இப்பத்தான் சோறு உண்டோம்!” என்று அதுகள் வேண்டாமென்று சொல்லிவிட்டன. தாத்தா மிட்டாய் தந்திருக்கிறார். புதல்வர்கள் போக்குப் பிடிக்கவில்லை என்றால் - அவர்கள் முகத்தில் விழிக்காமல் வந்துவிட்டாலும், குழந்தைகளை கண்டதும் வாரி அணைக்காமல் இருக்க முடியுமா பெரியவரால்? வேலாத்தாள்தான் சிறுசுகளை வெறுங் கையோடு எப்படி அனுப்புவாள்?) (அண்ணன் மாரப்பன் சீட்டாடப் பழகிக்கொண்டான். சம்மணையில் அணைக்கட்டு அருகே எங்கோ ஓர் இடம் காசு வைத்து ஆடுகிறானாம். தம்பி பழனியப்பன் தெருச் சுற்றப் பழகிக்கொண்டான். பள்ளிப் பசங்கள், காலிப் பசங்கள் சேர்க்கை.... பிள்ளைகளிடமிருந்து ஒன்றை எதிர்பார்த்தார். அவர்கள் வேறு ஒன்றைத் தந்துவிட்டார்கள். ஆகாய கங்கைக்காக காத்திருந்தவனை பாதாள சாக்கடைக்குள் தலைகுப்புறத் தள்ளினால்?) (சந்தனப் பூத்தென்ன, குங்குமப் பொட்டென்ன! அவருடைய தொந்திக்கு ரொம்ப லட்சணமாகக் குங்குமத்தைக்கூட இழுக்கி இருந்தாள் பேத்தி முத்தாயா. “உந்தங்கச்சி எப்படி இருக்கறா?” “நல்லாத்தான் இருக்கறா. ஆனா அப்பிச்சி! இத்துணூண்டு.” என்று விரல்களைக் குவித்து உருவம் காட்டினாள் முத்தாயா. “சின்னதிலே அப்படித்தான் இருக்குமாத்தா கொளந்தைக!”) ( இந்நேரம் அவர் வீட்டில் இருந்திருந்தால், திண்ணைமீது உட்க்கார்ந்திருப்பார். முத்தாயா பல் குச்சியை சூரிக் கத்தியில் சீவிக் கொடுத்துக்கொண்டிருப்பாள். சில நாள், பல் குச்சியை கடைசிவரை சீவி - வேறு குச்சிக்கு அவரை எழுந்து போகும்படி செய்துவிடுவாள். சிவன்மலைத் தேரில் சின்னக் கத்தி பேத்திக்கு வாங்கித் தந்திருந்தார். அந்தப் பேத்தி, எந்த நேரம் எந்த வேளை கதவைச் சன்னலைச் சுரண்டிக் கீறிக் காயப்படுத்துவாளோ என்று கண்காணித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவருடையதுதான்! ராம, லட்சுமணர்கள், மடியிலும் தலையிலும் குதித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களைப் பெற்ற ‘அப்பன்’களும், குழந்தையாக இருந்தபோது அப்படித்தான் செய்துகொண்டு இருந்தார்கள்!) - கலைச்செல்வன் செல்வராஜ்
Kalaiselvan Selvaraj 28-03-2018 11:40 am