மாண்புமிகு நீதியரசர் எஃப். எம்இ கலிஃபுல்லா அவரிகளின் பேருரைகள் பற்றிய நூல்….. நீதித்துறைக்கு நீதிபதி கலிஃபுல்லா அவர்களின் பங்பளிப்பைப் பற்றிச் சிந்திக்கும்போது, நீதிமன்ற அமர்வு மற்றும் வழக்கறிஞர் பெருமன்றத்தில் அவரின் பங்களிப்பை மட்டும் பார்த்தால் ஒரு முன்மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்த ஒருவரின் திறனைக் குறைவாகப் புரிந்து கொள்வதாக ஆகி விடும். அரசியல் அமைப்பின் தத்துவம், சட்டத்தொழில், சட்டத்தின் வெளிப்பாடு மற்றும் சட்டக் கல்வி போன்ற பாடங்களில் அவரது ஆழ்ந்த நுண்ணறிவு போற்றத்தக்கவை ஆகும். இத்தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ள உரைகளைப் படிக்கிறபோது, அன்றாட வாழ்க்கை அனுபவத்தின் பழுத்த ஞானத்தை, அவரது ஆழமான சிந்திக்கும் திறனை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. மும்பை, மஹாராஷ்டிரா தேசியச் சட்டப் பல்கலைக்கழகத்தில் அதன் முதல் இரண்டாண்டுகளில் நீதிபதி கலிஃபுல்லா அவர்கள் திறமையான வேந்தராகப் பணிபுரிந்தபோது, அவரின் சிறப்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் பாக்கியத்தைப் பல்கலைக்கழகம் பெற்றது. இத்தொகுதியானது, இன்றைய இந்தியாவிலுள்ள தலைசிறந்த சட்ட வல்லுநர்களில் ஒருவருக்கு சட்டப் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் பணிவான மரியாதையாகும்.
Be the first to rate this book.