இது தேர்ந்த வாசகனுக்கோ அல்லது பூடகக் கவிஞர்களுக்கான தொகுப்போ இல்லை.
சதா அலைவுறும் காதல் மனது ஒருபுறமென்றால், நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் இச்சமூகச் சூழல் ஒருபுறமென என தொகுப்பு முழுதும், விரவிக்கிடக்கும் வலியும்கூட ரசனை மிகுந்தே வெளிபடுகிறது.
உதாரணத்திற்கு இக்கவிதையைச் சொல்வேன்.
"எனது ஊரில்
கவிதை எழுதும் என்னை
யாருக்கும் தெரியாது.
ஆடை கிழித்து
ஆண்குறி விரைக்கத்
திரியும்
ஒரு பைத்தியக்காரன்
படு பிரசித்தம்"
ஆம். இன்றைய பிரபலங்கள் இப்படி தங்களின் பைத்தியக்காரத்தனங்களால்தான் தங்களை தனித்துவப் படுத்திக் கொள்கிறார்கள்.
Be the first to rate this book.