அமைதித் தவழும் ஒரு உலகத்தில் வாழ நாம் அனைவரும் விரும்புகிறோம் அல்லவா? சரி ,அப்படி அமைதியான ஒரு உலகை யார் நமக்குத் தருவார்கள் ?நான் முன்வராமல் நீங்கள் முயற்சி எடுக்காமல் அது முடியுமா ?தொடக்கம் என்னிடம் இருந்து வராமல் எந்த மாற்றமும் வருமா ?அப்படி நான் முன்வந்து சிறு கடுகளவு முயற்சி செய்தாலும் போதும் ,மழையளவு மாற்றம் விளையும் அல்லவா? அவ்வாறு முயற்சி செய்யும் சாந்தன் எனும் சிறுவன் ,மற்றுமொரு சிறுவனான சுவா பற்றியது இந்நூல் . இயற்கையோடு இணைந்து வாழும் சுவா ‘ஆரக்கல்’ என்னும் அறநெறியை பின்பற்றினான். ‘ஆரக்கலை ‘உண்மையான கல்விக்கான அறநெறி என்றும், 'ஆரக்கல்' அடிப்படையில் செய்யும் பணியை அமைதிக்கான பணி என்றும் , அதுவே சுவ தியானம் என்றும் உணர்ந்தான். ‘ஆரக்கலை ‘ சுவா வேறு எங்கிருந்தோ எவரிடமிருந்தோ பெறவில்லை . அவனே சுயம்புவாய் பெற்றான். வாருங்கள் ! நாமும் சென்று சாந்தனையும் சுவாவையும் இந்நூலில் சந்திப்போம்.
சுயக் கட்டுப்பாடு, சுயச் சிந்தனையைத் தூண்டி அதை ஆக்கப்பூர்வமானப் படைப்பாற்றலாக மாற்ற வல்ல கதைகள், ஓவியங்கள் மற்றும் செயல்முறை விளக்கங்களுடன், காந்தியக் கோட்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 150 அமைதிக்கல்விப் பாடங்கள்.
Be the first to rate this book.