சாத்தானியம்

சாத்தானியம்

1 rating(s)
332 ₹350 (5% off)
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: எஸ். எல். எம். றமீஸ்
Publisher: SARA
No. of pages: 345
Out of Stock
QR Code
Notify me when available


 

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789554207103
Published on: 2015
Book Format: Paperback
Category: கட்டுரை
Subject: பிற

Description

இப்லீஸின் உருவாக்கத்தோடு ஆரம்பமாகிய சாத்தானியம், உலக முடிவு காலத்தில் தோன்றும் தஜ்ஜாலின் அழிவு வரை,ஏகத்துவத்தைக் குறிவைத்து தாக்கிக் கொண்டே இருக்கும்.மனிதத்திற்கெதிரான அதன் பொறாமையும், எதிர்ப்பும்,இறைவனின் அழகிய பிரதிநிதியாம் ஆதிபிதா ஆதம் நபியின் படைப்போடு அம்பலமாகியது.அதனைத் தொடர்ந்து ஏகத்துவத்திற்கும் மனிதத்திற்கும் எதிரான சூழ்ச்சிகள் ஏகத்துவ தீர்க்கதரிசிகளை எதிர்க்கும் கொடுங்கோல் ஆட்சியாளர்கள் வடிவில் உருவெடுத்தன. ஏகத்துவத்தின் இறைத்தூதுகள் மக்களைச் சென்றடையாதவாறு தடுப்பதற்கான அத்தனை தீய நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்தி, மானிடத்தின் நற்பண்புகளை கட்டியெழுப்பும் வழிகளை தடை செய்து, மக்கள் மனதையும், சிந்தனையையும் இருளிலே தக்க வைக்க,காலாகாலமாக பல தீய திட்டங்கள்தீட்டப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இந்தக் கசப்பான வரலாற்றுப் பாதையில்ஏகத்துவத்தைப் பாதுகாக்க எத்தனையோ பல தீர்க்கதரிசிகள்சித்திரவதைப் படுத்தப்பட்டும், சிறையில் அடைக்கப்பட்டும், கொல்லப்பட்டும் பலியாகியுள்ளார்கள். ஆனாலும் ஆதிபிதாவில் ஆரம்பித்த ஏகத்துவத்தின் சங்கிலித் தொடரை பாதுகாத்து பின்வந்த இறைநேசத்தின் மையமாக விளங்கிய இறைத்தூதர்களிடம் ஒப்படைத்துச் சென்றுள்ளனர்.அது நூஹ், இப்றாகீம், இஸ்ஹாக், மூஸா,ஈஸா, யாகூப் மற்றும் தாவூத், சுலைமான் போன்ற தீர்க்கதரிசிகளைக் கடந்து இறுதித் தூதர் எங்கள் கண்மணி நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வருகையுடன் பூரணப்படுத்தப்பட்டு, அதன் பின்தொடர்இவ்வுலக இறுதிக் கால சத்தியத்தினதும் நீதியினதும் முழு வடிவமாகத் தோன்றும் இமாம் மஹ்தி (அலை) அவர்களின் நல்லாட்சியோடுதான்முற்றுப் பெறும். எனவேதான் அந்த நீதமான ஆட்சி உருவாக வழிவகுக்கும் பாரிய பொறுப்பு நல்லடியார்களுக்கே உள்ளது. இதற்கு எதிர் முனையில் ஏகத்துவத்திற்கு எதிராகவுள்ள தீய சக்திகள் அவர்களின் அசத்திய திட்டங்களை பல வடிவங்களில் வகுத்து, அதன் சங்கிலித் தொடரை மஹ்தி (அலை) அவர்களை எதிர்க்கும்,தஜ்ஜாலின் ஆட்சி வரை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

அதற்கான நடைமுறை ரீதியான செயற் திட்டங்களும் செயற் பாடுகளும் என்றோ ஆரம்பமாகி விட்டன.அவற்றை அடையாளப்படுத்தி, தற்கால மற்றும் எதிர்கால தஜ்ஜாலின் வடிவங்களையும் செயற்பாடுகளையும் நடைமுறை ஆதாரங்களை முன்வைத்து, வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த எடுத்துள்ள முயற்சியினை இந்த ஆய்வின் சில பகுதிகளில் அவதானிக்க முடியும். அதற்கிடையில் உலக சாத்தானிய ஆட்சியை நிறுவ நகரும் பாதையை அடைய தீய சக்திகள் வகுத்துள்ள திட்டங்களையும் அதன் இரகசிய அமைப்புகளையும் அவர்களின் குறியீடுகளையும் இங்கு அறிமுகப்படுத்தியுள்ளதோடு இன்றைய மனித நேயத்தின் அடையாளங்களாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, ஐ.நா.சபை, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை உருவாக்கப்பட்டதன் உள்நோக்கங்களையும் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றி எத்தனையோ பல விடயங்கள் நடைபெறுகின்றன. மேலும் சில குறிப்பிட்ட இலக்கங்களும் சின்னங்களும் விரும்பியோ விரும்பாமலோ நம்மைச் சுற்றி வருகின்றன. அவற்றை நாம் சர்வ சாதாரணமானதாக கருதி கடந்து சென்று விடுகின்றோம். அவை ஒவ்வொன்றுக்குமிடையில் ஏதாவது தொடர்புகள் உள்ளனவா?அல்லது அவை அனைத்தும் எவ்வித முன் திட்டமுமின்றி இயற்கையாகவே நடைபெறுகின்றனவா? என வினா எழுப்பி அதற்கான திருப்திகரமான விடைகளை இந்த ஆய்வில் வாசகர்களுக்கு வழங்கி,அதற்குப்பின்னால் உலக மட்டத்தில் உள்ள தீய சக்திகளை திரை கிழித்துக் காட்ட முயற்சித்துள்ளோம்.

- எஸ். எல். எம். றமீஸ் PhD.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 
1 rating(s)
5
1
4
0
3
0
2
0
1
0

5 இந்நூல் கிடைக்கச்செய்யுங்கள்

இந்நூலை எப்படி ஒரே ஒரு பிரதியெனும் எனக்கு வாங்கிதாருங்கள் common

Mubeen Akkif 24-10-2023 04:58 pm
Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat (10am-7pm)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp