இரண்டு முக்கியத் தேவைகளை கருத்தில் கொண்டது இந்த நூல். இஸ்லாமிய நோக்குகளையும் இஸ்லாமிய சிந்தனையின் மூலாதாரங்களையும் வெளிக்கொண்டு வருவதோடு, மதவியல் சார்ந்தோரும் சாராதோருமான முஸ்லிம், முஸ்லிமல்லாத அறிஞர்களுக்கு சர்வதேச உறவுகள் பற்றிய இஸ்லாமியக் கோட்பாட்டினை அறிவுபூர்வ நிலையில் நின்றும் அறிமுகம் செய்வது.
இரண்டாவது, சமகால உலகச் சிந்தனைகளிலும் நோக்குகளிலும் இஸ்லாமிய சிந்தனையானது குறிப்பிடத்தக்க பங்கேதும் வகிக்க முடியாது போயுள்ளமைக்கான காரணங்களைக் கண்டு ஆராய்வதோடு, சர்வதேச உறவுத்துறையில் அமைதி, சமாதானம், பாதுகாப்பு, கூட்டுறவு என்பனவற்றை நிலைபெறச் செய்யும் முனைவுகளில் மேலைத்தேய சிந்தனைகள் கண்டுள்ள தோல்விகளை ஈடுசெய்யும் வகையில் புதிய கருத்துகளையும் மாற்று வழிமுறைகளையும் முன்வைப்பது.
Be the first to rate this book.