இந்நூல் சர்வாதிகார அரசுகளின் தோற்றம்
அவற்றை தோற்றுவிக்கும் பருமனான சமூகப் பொருளாதார அரசியல் காரணிகள் ஆகியனவற்றை ஆய்வு செய்து விவரிக்கும் நூல் அல்ல;
மாறாக மேற்கு நாடுகளின் சனநாயக அமைப்புகளுக்குள்ளேயே வாழும் சனநாயகத்தை நம்பும் தனிநபர்களின், குடிமக்களின் கடமைகளையும் பொறுப்புக்களையும் பற்றிய நூல் இது.
குடிமக்கள் அக்கறையின்றிப் போய்விடும்போது சனநாயகம் தனக்குள்ளிருந்தே சர்வாதிகாரத்துக்கான சாத்தியங்களை வெளிக்கொணரும் சந்தர்ப்பங்களை விளக்கும் நூல் இது.
சனநாயகத்தை ஒட்டுமொத்தமாக அதன் குடிமக்கள் நம்பியிருந்தால் போதாது, மாறாக,சனநாயகத்தின் தினசரி செயல்பாட்டை அதன் ஒவ்வொரு குடிமகனும் குடிமக்களும் ஒவ்வொரு நாளும் எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும்
நூல் இது.
அரசு நிர்வாகம், தேர்தல், அரசின் அறிவிக்கப்பட்ட கொள்கைகள் போன்ற பருமனான நிகழ்வுகளோடு மட்டும் திருப்தி அடைந்து விடாமல், அதன் நுண்மையான செயல்பாடுகளைக் குடிமக்கள்
அவ்வப்போது தமது உரிமைகளுடன் தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்ளவேண்டிய அவசியம் உள்ளது
என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.
5 மார்க்சிய செவ்வியல் நூல் வரிசை: 1
சர்வாதிகாரம் குறித்து (இருபதாம் நூற்றாண்டிலிருந்து இருபது பாடங்கள்) மார்க்சிய செவ்வியல் நூல் வரிசை: 4 ஆசிரியர்: டிமோத்தி ஸ்னைடெர் தமிழில்: தஞ்சை ரமேஷ் விலை: 140 வாழ்க்கையே அரசியல்தான்,உங்கள் உணர்வுகள் குறித்து உலகம் அக்றை கொள்கிறது என்ற காரணத்திற்காக அல்ல,உங்கள் செயலுக்கு உலகம் மறுவினை ஆற்றுகிறது என்பதால்.நமது சிறு தெரிவுகளும்,அதனளவில் ஒரு வகையான வாக்கு.எதிர் காலத்தில் சுதந்திரமான,நியாமான தேர்தல்கள் நடைபெறுமா இல்லையா என்பதை அவை முடிவு செய்யும். - டிமோத்தி ஸ்னைடெர் இன்றைய அரசியல் சூழுலில் மக்கள் என்ன பேசவேண்டும்,எதை பார்க்க வேண்டும்,எதை தெரிந்துகொள்ள வேண்டும்,எதை பின்பற்ற வேண்டும் என்பதை…கார்ப்பரேட் ஊடகம் தான் முடிவு செய்கிறது.அம்பானி துறைமுகத்தில் பல கோடி மதிப்பிலான போதை பொருள் பிடிக்கப்பட்ட செய்தியை மறைத்து, நடிகர் ஷாருக்கான் மகன் போதை பொருள் வைத்திருப்பாதாக வந்த செய்தியை இந்திய முலுக்க பேசுபொருளாக மாற்றியது இது தான் இன்றைய மக்களை சுயசிந்தனையை மலட்டு தன்மையில் வைத்திருக்கும் தொழில்நுட்ப்ப சர்வாதிகாரம்.இப்படி மக்கள் தேர்ந்தேடுத்த அரசு எப்படி மக்களுக்கே தெரியமால் தனது சர்வாதிகாரத்தை கட்டி அமைக்கிறது என்பதை இந்த புத்தகத்தில் வரலாற்றில் நடந்த பல உண்மை சம்பவத்தை வைத்து நமக்கு இருபது தலைப்புகளில் மிக சிறப்பாக எழுதியுள்ளார் தோழர் டிமோத்தி ஸ்னைடெர் அதனை தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் தோழர் தஞ்சை ரமேஷ் மொழிப்பெயர்த்துள்ளார். சர்வாதிகாரத்தின் ஆழமான மூலங்களைப் புரிந்து கொள்வதற்கும்,அதற்கு உரிய எதிர்வினைகளை சீர்தூக்கிப் பார்ப்பதற்கும், நாம் வரலாற்றை ஆராய வேண்டும் என நமது சொந்தப் பாரம்பரியம் கோருகிறது.20-ஆம் நூற்றாண்டில்,ஜனநாயகமானது பாசிசம்,நாசிசம்,கம்யூனிசத்திடம் சரணாகதி அடைந்ததைப் பார்த்த ஜரோப்பியர்களைவிட நாம் கூடுதல் அறிவுபடைத்தவர்கள் அல்லர்.நமக்கு இருக்கும் ஓர் அனுகூலம்,நாம் அவர்களது அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள முடியும்.அவ்வாறு கற்பதற்கு இந்த நூல் சரியானதாகயிருக்கும். * முன்கூட்டியே கீழ்ப்படியாதீர்கள் * அமைப்புகளைப் பாதுகாருங்கள் * ஓரு கட்சி அரசு குறித்து எச்சரிக்கையுடனிருங்கள் * உலகின் தோற்றத்திற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் * தொழில்சார் அறத்தை நினைவில் வையுங்கள் * ஆயுதம் தாங்கிய குழுக்கள் குறித்து எச்சரிக்கையாயிருங்கள் * நீங்கள் ஆயுதம் வைத்திருந்தே ஆக வேண்டும் என்றால் ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படுங்கள் * தனித்து நில்லுங்கள் * நமது மொழி மீது கருணையுடன் இருங்கள் * உண்மை மீது நம்பிக்கை வையுங்கள் * புலனாய்வு செய்யுங்கள் * கண்களைப் பார்த்து நட்புடன் பேசுங்கள் * உடலரசியல் செய்யுங்கள் * தனிப்பட்ட வாழ்க்கையை நிறுவுங்கள் * நல்ல முயற்சிகளுக்கு உங்கள் பங்கை வழங்குங்கள் * மற்ற நாடுகளைச் சேர்ந்த நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் * அபாயகரமான வார்த்தைகளுக்குக் காதை கூர்தீட்டி வைத்துக்கொள்ளுங்கள் * நினைத்துப்பார்க்க முடியாத நிகழும் போது நிலைகுலையாமல் இருங்கள் * நாட்டுப்பற்றாளராக இருங்கள் * உங்களால் இயன்ற அளவு துணிச்சலுடன் இருங்கள் உலக அரசியல் இயக்கங்கள் அனைத்தும் தனுது புனித தன்மையை பல இடங்களில் கேள்வி ?கேட்க்கும் பல வரலாற்று தரவுகள் இருப்பது இந்த நூலின் கூடுதல் சிறப்பு.அதே சமயம் ரஷய் சோசலிசத்தின் சர்வாதிகாரத்தை பேசிய அளவுக்கு மாற்று சமகால முதலாளித்துவத்தின் சர்வாதிகாரத்தை கோரமுகத்தை பதிவு செய்யவில்லை இதில் கூடுதல் மகிழ்ச்சியாக இந்த நூலில் பல இடங்களில் இடதுசாரி அரசியல் மற்றும் இடதுசாரி அரசின் சர்வாதிகாரத்தை பதிவு செய்திருந்தாலும் இதனை மொழிபெயர்த்து வெளியிட்ட NCBHயின் நேர்மைக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி கணேஷ் பாரி 16-10-2021
Ganesh Pari 22-10-2021 09:04 am