இரண்டாம் உலகப் போரின்போது அடால்ஃப் ஹிட்லர் இனவெறிக் கொள்கையின் காரணமாக, யூதர்களை வேட்டையாடி ஜெர்மனியை பிணக்காடாக மாற்றிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில், உலகின் ஒப்பிடமுடியாத மகத்தான திரைக்கலைஞர் சார்லி சாப்ளின் ஹிட்லரை நேரடியாக விமர்சிக்கும் 'சர்வாதிகாரி' என்ற அரசியல் திரைப்படத்தை இயக்கி நடித்தார். தன்னுடைய மென்மை குணத்திலமைந்த கோமாளித்தன நடிப்பின் மூலம் அளப்பரிய மகிழ்வை அன்பளிப்பாகத் தந்த அவர், முற்றிலும் மாறுபட்டு அதிகார போதையால் புத்தி பேதலித்த ஹிட்லரை பிரதிசெய்யும் கதாபாத்திரத்தில் நடித்து பகடிசெய்த 'சர்வாதிகாரி', நூற்றாண்டுகால திரைப்பட வரலாற்றில் அரிய நிகழ்வு. மனக்குலையை நடுங்கவைத்த அந்தக் கொடிய மனிதரை அவர் வாழும் காலத்திலேயே விமர்சித்த கலைஞர்கள் சாப்ளினைப் போல வேறு யாருமே இல்லை. அத்தகைய சிறப்பைப் பெற்ற 'சர்வாதிகாரி' திரைப்படத்தின் திரைக்கதையையும் கதையாக்கத்தின் உள்ளீடுகள் சார்ந்த பதிவுகளையும் வழங்கும் முயற்சியே இந்த நூல்.
Be the first to rate this book.