புனைவின் மீது கொள்ளும் அதீத ஈடுபாடும் தனித்துவமான பார்வைகளும் இவருக்குள் கதையாக மாறுகின்றன. துவக்கப் பக்கங்களில் ஒரு விட்டேத்தி மனம், பருவம், காதல் என்ற ஆரம்பகாலக் கதைக்கள மொழி எட்டிப் பார்த்தாலும், அடுத்தடுத்த கதைகளுக்குள் இருக்கும் அழுத்தமும் அவரது வட்டார மக்களிடையே புழங்கும் சொற்களைக் கையாண்டிருக்கிற விதமும் திகைக்கச் செய்யும். அதேபோல கதைகளுக்குள் அலைபாய்கிற மனிதர்களைக் குறித்தும் சொல்லவேண்டும். அப்பட்டமான ஊர்ச்சாயலுடன் பதிவாகியிருக்கிறார்கள். ஜீவா படைப்பகம் வழியாக வெளியாகிற, ‘முதல் சிறுகதைத் தொகுப்பு’ வரிசையில் தஞ்சை தமிழனின் இந்தப் புத்தகம் ஒரு நல்ல அனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன்.
- கார்த்திக் புகழேந்தி
Be the first to rate this book.