ஒரு கனவு நிலம். அங்கே வெவ்வேறு வடிவங்களில் கதை கிடைக்கிறது. அங்கே வெவ்வேறு கதைகள் வடிவங்களாக கிடக்கின்றன. கதைகளை அசைபோட்டுக் கொண்டும் வடிவங்களை சேகரித்துக் கொண்டும் பயணிக்கையில் ஒன்று புலனாகிறது. இது கனவு நிலமன்று.
'நேற்று' ஆண் மகனை பெற்று 'நாளை' தூக்கு மேடை ஏறப்போகும் தந்தையாக நம்மை 'இன்று' மாற்றுகிறார். அதுவும் ஐந்து முறையில் நம்மை பதட்டப்பட வைக்கிறார் சிவசங்கர்.
மேலும் தொகுப்பில் தீ என்று எழுதினால் எரியும் திறன் கொண்ட கவிஞனை காணலாம். ஓவியன், தண்டவாளம் வரைந்தால் ரயில் நம்மை நெருங்கி விடும். ஓர் பாடகன் பாடினால் போதும் ஏழு மலை துளைக்கும். இதே போல் கனவுக்காரன், துரதிர்ஷ்டக்காரன், இசைஞன் இருக்கிறார்கள், 'நாதியற்றவனின் சிறுகுறிப்பாக' . ஏவாள் மறுஉரு கொண்டு எழுகிறாள். ஃபிராய்டிடம் தன்னை ஒப்புவிக்கிறாள். 'ஃபிராய்டின் நாட்குறிப்புகளில்'..
சிவசங்கர் தன்னை சுற்றி நடக்கும் அவலங்களை கேள்விகளையும் விமர்சனங்களையும் கொண்டு புனைவாக்குக்கிறார்.
Be the first to rate this book.