சந்தேகமில்லாமல் சரோஜினி ஒரு புரட்சிப்பெண். அடுப்பறையைவிட்டு வெளியில் கூட எட்டிப் பார்க்காத பெண்கள் மத்தியில் ஒரு சூறாவளி போல் செயல்பட்ட அரசியல் தலைவர் அவர். காந்தியின் நிழலாக மாறி போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றார். சிந்தனை, பேச்சு, எழுத்து, செயல் அனைத்தையும் தேசத்தின் சுதந்தரத்துக்காக மட்டும் செலவிட்டார்.
"ஆ, இவரைச் சமாளிக்க முடியவே முடியாது" என்று பல சந்தர்ப்பங்களில் பயந்து பின் வாங்கியது ஆங்கிலேய அரசாங்கம். தன்னுடைய பணிகள் பலவற்றை நம்பிக்கையுடன் சரோஜினிக்குப் பகிர்ந்தளித்த காந்தி, "எனக்குப் பிறகு இவர்தான்" என்று பெருமையுடன் சரோஜினியை முன்மொழிந்திருக்கிறார்.
இனிய நடையில் சரோஜினியின் உத்வேகமூட்டும் வாழ்க்கை வரலாறு.
Be the first to rate this book.