நான் 1938இல் இரண்டு மாதங்கள் சேலத்தில் ஒரு ஹோட்டலில் போய் உட்கார்ந்துகொண்டு ஒரு நாவலை எழுதி முடிப்பது என்று தீர்மானித் தேன். நாற்பத்தைந்தே நாட்களில் 'சர்மாவின் உயில்' நாவலை எழுதி முடித்துவிட்டு, அடுத்த பத்து நாட்களில் அதைத் திரும்பவும் எழுதி விட்டேன். இரண்டாவது தடவை எழுதியது பல அனாவசியமான பகுதிகளை அகற்றவும் நாவலைச் சுருக்கமாக எழுதவும் எனக்குப் பயன்பட்டது. இந்நாவலில் வரும் கதையோ சம்பவங்களோ ஜோசியமோ முக்கியமல்ல. ஆனால் குணச் சித்திரங்கள், மனப்போராட்டம், உலகமே ஒரு குடும்பம் என்கிற சித்தாந்தம் இவற்றில் நம்பிக்கை வைத்து நான் எழுதிய நாவல் 'சர்மாவின் உயில்'. எனக்குத் திருப்தி தந்த முதல் நாவல் இது.
- க. நா. சு.
Be the first to rate this book.