மேலாண்மை எனும் போர்க் குதிரையின் மீது சவாரி செய்வதற்குச் சில அடிப்படை விதிகள் உண்டு. அவற்றை முறையாக அறிந்துகொண்டு குதிரையைச் செலுத்தினால்தான் சேர வேண்டிய இலக்கைச் சரியான நேரத்தில் அடைய முடியும். நிர்வாக இயந்திரம் உராய்வுகள் இல்லாமல் இயங்க உதவும் அடிப்படைத் தத்துவங்கள் யாவை? இலக்குகளை அடையச் சரியாகத் திட்டமிடுவது எப்படி? ஆளுமையை வளர்த்துக்கொள்வது எப்படி? உங்களது உச்ச செயல்பாட்டு நேரத்தை உபயோகிப்பது எப்படி? பணியாளர்களை எந்த விதங்களில் ஊக்குவித்து நிறுவனத்தை முன்னேற்றுவது? பணியாளர்களை நிறுவனம் என்னும் குடும்பத்தின் அங்கத்தினர் ஆக்குவது எப்படி? பொறுப்பேற்றுக் கொள்வது, புதுமைகளைப் புகுத்துவது, உணர்வாற்றலுடன் கூடிய அறிவாற்றல், தொடர்பாற்றல், உறுதியான, நேர்மையான அணுகுமுறை. அதிகார விநியோகத்தின் விதிகள், பணியாளர்களைக் குழுக்களாக அமைக்கும் கலை, இயக்கும் தந்திரம். குழுக்களை ஆளும் தலைமையின் வகைகள், பண்புகள், ஆதாயங்கள், அபாயங்கள், சாகசம் செய்யும் வகையில் சந்திப்புகளை அமைப்பது, இயக்குவது, உறுப்பினர்களைப் பங்குபெறச் செய்யும் யுக்திகள், உயர் மேலாண்மையின் கோட்பாடுகள் அனைத்தையும் நூலாசிரியரின் தொழில் வாழ்க்கை உதாரணங்களோடு எடுத்து விளக்கும் பெட்டகம் இது. படித்து, செயல்படுத்தி உங்கள் தொழில் மேலாண்மைப் பாதையில் வெற்றிகரமாக சவாரி செய்யுங்கள்!
Be the first to rate this book.