கேமராவின் கண்டுபிடிப்பு மனித குலத்திற்கு பெரும் பலனை அளிக்கக்கூடியதாக உள்ளது. கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலக வரலாற்றைக்கூட மாற்றுவதாக அமைந்துள்ளது. 20ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் வியட்நாம் போரை நிறுத்த காரணமாக அமைந்தது. 1994ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட குழந்தையின் புகைப்படம் சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்தது. அறிவியலின் சாதனைகளை கண்டுணர பல புகைப்படங்கள் நமக்கு உதவுகின்றன. நிலவில் மனிதனின் காலடியை காட்டும் புகைப்படம் விண்வெளியில் மனிதன் சாதித்த சாதனையை விளக்குகிறது. செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்கள் மனிதனின் காலடி படாத இடத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது.
கேமரா கண்டுபிடிப்பிற்கு பின்பு உலகில் நடந்த கண்டுபிடிப்புகளை படமாக்கப்பட்ட பல செய்திகளையும், புகைப்படங்களையும் பற்றிய ஒரு சிறு விளக்கத்தைக் கொடுக்கக்கூடிய புத்தகமாக இது எழுதப்பட்டுள்ளது. கேமராவை ஆக்கப் பணிகளுக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் பல அரிய தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் நமது கேமராக்களைப் பயன்படுத்த வேண்டும்.
இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு. E. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. S.நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்துகொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி.
Be the first to rate this book.