'சரஸ்வதி சந்திரன்' என்னும் இந்த நூல் பத்தொன்பதாவது நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்தவுடன் கற்றறிந்த குஜராத்தி வாசகர்களிடையே பெரும் விழிப்பை மூட்டியது. நூலாசிரியர், கோவர்தனராம் மாதவராம் திரிபாட்டி (1855 - 1907), இதை எழுதுவதற்குப் பதினான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டார். அந்நாளைய அரசியல் (ஊழல் நிறைந்த, நூற்றுக்கும் மேற்பட்ட சுதேசி சமஸ்தானங்கள், வெள்ளையரின் ஆட்சி), சுரண்டப்பட்ட பொருளாதார நிலை, சமூக ஏற்றத்தாழ்வுகள் யாவற்றையும் தெள்ளெனப் படம்பிடித்துக் காட்டிய இந்நூலை அண்ணல் காந்தியடிகள் போற்றியிருக்கிறார்.
Be the first to rate this book.