மும்பை நகரத்தைத் தூங்காத நகரம் என்பார்கள். அதன் இயக்கத்தினுள் வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருப்பவர்கள் அநேகம். வேகம் கொண்ட அதன் அன்றாடச் சுழற்சியில் வாழ்க்கையை இயல்பாக அமைத்துக்கொண்டு விழுந்தும் எழுந்தும் வாழ்பவர்கள், இந்த நகரத்தில் மட்டுமேதான் வாழ முடியும் என்று நினைப்பவர்கள், இந்த நகரத்தில் உறவுகளுக்கான அர்த்தங்களைப் புரிந்துகொள்பவர்கள், இவர்களுடன் அதன் சக்கரத்தின் பற்களில் சிக்கி நசுங்கிப்போய்விடுபவர்களும் உண்டு. சுதா குப்தாவின் துப்பறியும் அனுபவங்கள் மூலம் மும்பை நகரம் இயங்கும் விதங்களைக் கூறும் நான்கு நீண்ட கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
Be the first to rate this book.