வீரப்பனின் வாழ்க்கை தமிழக வரலாற்றின் ரத்த அத்தியாயம். இருபது வருடங்கள் பத்திரிகை, தொலைக்காட்சி அத்தனையிலும் பரபரப்பாக பவனிவந்தவன். தமிழகம், கர்நாடகம் என இரு மாநில போலீஸாருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அந்தக் காட்டுச் சிறுத்தையின் கதைதான் என்ன? சந்தனமரக் கடத்தல், யானை வேட்டை, ஆள்கடத்தல்... என தன் ஒவ்வொரு அசைவிலும் காட்டுக்குள்ளிருந்தே நாட்டை அதிரவைத்த அவன் பின்னணி என்ன? சின்னஞ்சிறு ஆள்படை வைத்துக்கொண்டு வனஅதிகாரியிலிருந்து வி.ஐ.பி_க்கள் வரை கச்சிதமாகக் கடத்தி இரண்டு அரசுகளையே மிரட்ட முடிந்தது எப்படி? வீரப்பன் என்ற மனிதனுக்குள் இப்படி ஒரு மிருகம் எப்படி நுழைந்தது? இரக்கமில்லாத அந்த மிருகத்துக்குள்ளும் மனைவி, குழந்தை என குடும்பப்பாசம் வந்தது எப்படி? இப்படி ஏகப்பட்ட கேள்விக் குறிகளுக்கு விடைதேடும் முயற்சியாகத்தான் 'சந்தனக்காட்டு சிறுத்தை!' ஜூனியர் விகடனில் ஆரம்பிக்கப்பட்டது. வீரப்பனின் அட்டகாசங்கள் உச்சத்தில் இருந்த சமயம் இந்தத்தொடர் ஜூ.வி.யில் வந்துகொண்டிருந்தது.
Be the first to rate this book.