அமைதித் தவழும் ஒரு உலகத்தில் வாழ நாம் அனைவரும் விரும்புகிறோம் அல்லவா? சரி ,அப்படி அமைதியான ஒரு உலகை யார் நமக்குத் தருவார்கள் ?நான் முன்வராமல் நீங்கள் முயற்சி எடுக்காமல் அது முடியுமா ?தொடக்கம் என்னிடம் இருந்து வராமல் எந்த மாற்றமும் வருமா ?அப்படி நான் முன்வந்து சிறு கடுகளவு முயற்சி செய்தாலும் போதும் ,மழையளவு மாற்றம் விளையும் அல்லவா? அவ்வாறு முயற்சி செய்யும் சாந்தன் எனும் சிறுவனைப் பற்றியது இந்நூல் . கதைகள் நமது அன்றாட வாழ்வில் நடக்கக் கூடியவை .கற்பனை அல்ல, எளிமையானவை புதுமையானவை, உரையாடலுக்கும் ஆய்வு மேற்கொள்வதற்கு வேண்டிய படைப்பாற்றலை தூண்டக்கூடியவை .சாந்தனின் சாதனை பற்றி அறியும் போதே உங்களுக்கும் ஒரு உற்சாகம் பிறக்கும். ஏதாவது செய்யக்கூடாதா என்று உந்துதல் வரும். அதுபோல ஒரு அணுச்செயலை செய்வீர்கள். ஆனந்தம் பொங்கட்டும் !நமது உணர்வுகளில் !அமைதி தழைக்கட்டும்! பிரபஞ்ச மரபுகளில் …வாருங்கள் சென்று பார்ப்போம் சாந்தனை பற்றி.சாந்தன் செய்யும் சாதனைகள் 50 கதைகளாக தரப்பட்டுள்ளது
Be the first to rate this book.