நாங்கள் குழந்தைகளாக இருந்த நாட்களில் நேரு மாமாதான் எங்களுக்கெல்லாம் பிடித்தமான தலைவராக இருந்தார். ஆனால் எந்நேரமும் கையில் பீ வாளியுடன் அன்று நகரங்களின் தெருக்களில் அலைந்துகொண்டிருந்த (இன்றும்தான்) சுகாதாரப் பணியாளரான சஞ்சீவியை எங்கள் நேரு மாமா இடத்துக்கு உயர்த்தி இளங்கோ எழுதியிருக்கும் இந்நாவல் உண்மையிலேயே வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் நெருக்கமானவராக சஞ்சீவி மாமாவை ஆக்கிவிடுகிறது.
இதை வாசிக்கும் குழந்தைகள் சுகாதாரப் பணியாளர்கள் மீது பரிவும் நேசமும் கொள்வதோடு, இச்சாதியமைப்பின் மீது வெறுப்பும் கொள்வார்கள் என நான் நம்புகிறேன். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வை பிற சாதிக்காரர்கள் எழுதலாம். எழுதினால் இப்படி சுயசாதிப் பெருமிதங்களுக்கு எதிராக குற்ற மனம் கொள்ளும் விதமாக எழுத வேண்டும்.
- ச.தமிழ்ச்செல்வன்.
Be the first to rate this book.