நம்ப முடியாத வேகம். நடந்த நாடகங்களை அவற்றின் அப்போதைய பதைபதைப்புக்குச் சற்றும் பங்கமில்லாமல் மீள்பார்வை பார்க்கவைக்கிறது.
கார் தயாரிப்பதற்கு ஏற்ற பயிற்சியோ அனுபவமோ இல்லை. ஆனாலும் ஆண்டுக்கு ஐம்பதாயிரம் கார்களைத் தயாரிப்-பதற்கான உரிமை சஞ்சய் காந்தியின் மாருதி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்திராவின் மகன். பதவி எதிலும் இல்லாத போதும் இன்னொரு அதிகார மையமாக மாறி அவர் எடுத்த முடிவுகள் அதிகார அத்து-மீறலின் உச்சம். ஆயினும் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது. இந்திராவின் மகன். பெருகிவரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஒரே வழி வாசக்டெமி என்று சஞ்சய் காந்தி சொன்னபோது ஒட்டுமொத்த இந்தியாவும் நடுங்கிப்போனது. அதை செயல்படுத்த அவர் காட்டிய தீவிரம் இப்போது நினைத்தாலும் திகிலூட்டக்கூடியது. இந்திராவின் மகன்.
இத்தனைக்குப் பிறகும் சஞ்சய் காந்தி இந்திய அரசியலில்/ இந்திய அரசியலுக்கு முக்கியமானவராக இருந்தார். காரணம், இந்திராவின் மகன் என்பது மட்டுமல்ல. விறுவிறுப்பாக விளக்குகிறார் ஆர். முத்துக்குமார். இந்திய அரசியலில் சஞ்சய் காந்தி ஹீரோவா? வில்லனா? ஹீரோவாக்கப்பட்ட வில்லனா? வில்லனாக்கப்பட்ட ஹீரோவா? தெளிவான விடைதரும் முதல் புத்தகம்.
Be the first to rate this book.