முகப்படாம் அணிந்த குட்டி யானைகள் காதுகள் அசையும் சப்தம் வியப்புத் தும்பிக்கைகளால் விசிறிவிடப்படுகின்றன. வாசனை துழாவும் மனதுக்குள் மௌனத்தின் ஏகாந்த இருள் பெய்கிறது. மௌனம் பூப்படையும் தருணமொன்றில் ஒழுங்கமைவின் கணங்கள் மீது சரிந்து விழுகின்றன சீட்டுக்கட்டுகள். காதல் துள்ளி விளையாடும் சப்தங்களைக் கடந்த அவன் பயணத்தின் போது பருக விரும்புவது ஓயாத உடலின் சியாமளங்களை. அவனின் ஆதி தாகம் கடல் கடந்து நெடுக பரவுகிறது. கவிதையாய், கவிதையின் சொற்களாய், சொற்களின் மௌனமாய், மௌனத்தின் ஒளி பரவும் அழகியலாய்...!
- சரோ லாமா
Be the first to rate this book.