பெண்கள் இரட்டையர் பிரிவில் தற்போது உலகத் தர வரிசையின் முதலிடத்தில் இருக்கும் சானியா மிர்ஸா, 16வது வயதில் பெண்கள் இரட்டையர் விம்பிள்டன் போட்டிகளில் வென்று உலகமெங்கும் பரபரப்பாகப் பேசப்படும் ஆட்டக்காரரானார். ஆறுமுறை ‘கிரான்ட் ஸ்லாம்’ சாம்பியனான இவர், டென்னிஸ் ஆட்டத்தில் தலைசிறந்தவராகப் பரிணமிப்பதற்கு கடந்த தடைகள் ஏராளம். வாழ்க்கைப் பாதையில் எதிர்கொண்ட துன்பங்கள், காயங்களுக்காகப் பெற்ற சிகிச்சைகள்; உளவியல் ரீதியிலான அதிர்ச்சிகள், வாழ்வின் மைய நீரோட்டத்தோடு கலந்துவிட்ட குடும்பம்; நண்பர்கள், எப்போதும் பொதுமக்கள் பார்வையிலேயே இருக்கும் நிலை குறித்த மனஅழுத்தம், வெற்றியுடன் சேர்ந்தே வரும் தவிர்க்க முடியாத அரசியல், மனவேதனை இவற்றை இந்நூலில் வெளிப்படையாக எழுதியுள்ளார் சானியா.
Be the first to rate this book.