தலித் பெண் குழந்தைகளின் பிறப்பு, வளர்ப்பு, விளையாட்டு, சடங்குகள், தலித் பெண்களின் மதமாற்றம், வாழ்க்கை முறை, உழைப்பு, படிப்பு, கோவில், திருவிழாக்கள், நாடகம், பொழுது போக்கு, குடும்பக் கட்டுப்பாடு, குருட்டு நம்பிக்கைகள், பேய் பிடித்து ஆடுதல், கணவன் – மனைவி சண்டைகள், பெண்களின் இழிநிலை, மணமுறிவு, மறுமணம் பற்றிய மரபுகள், தலித் மக்கள் மீதான ஆதிக்கசாதி மக்களின் அடக்கு முறைகள், தலித் இனப் பெருமைகள் போன்ற அச்சு அசலான வாழ்வனுபவங்கள் வாசகர் கண்முன் சித்திரங்களாக விரிகின்றன.
இந்நாவல் தலித் இனத்தின் எழுச்சிக் குமுறல். தலித் மக்கள் வாழ்ந்த பொருளாதார, கலாச்சார, சமூகச் சூழலிலிருந்து பெற்ற அனுபவங்களை ஆய்வுக்கு உட்படுத்தி எழுச்சிமிக்க தலித் கலகப் பண்பாட்டிற்கு வாசகர்களை இட்டுச் செல்கிறது இச்’சங்கதி‘
Be the first to rate this book.