இதுவரை கிடைத்த ஆய்வுகளில் துல்லியமான கருத்துகள் அகப்படாமையால், சாதி-தீண்டாமை என்ற கோட்பாடுகள் சங்க இலக்கியத்தில் தென்படுகின்றனவா என்று காண விரும்பிய முயற்சியின் விளைவே இந்த நூல். சங்கமருவிய இலக்கியங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டேன். இந்தக் காலத்தில் நாம் பார்க்கும் சமூகச் சூழலைச் சங்க இலக்கியச் சூழலின்மேல் கவிழ்க்காமல், சாதி-தீண்டாமை என்ற கோட்பாடுகள் காலந்தோறும் எப்படி உருப்பெற்றன என்று ஆய்வதே நேரியது. இந்த நூல் அந்தவகை ஆய்வின் தொடக்கமே.
Be the first to rate this book.