சங்க இலக்கியத்தை பற்றி ஆய்வு பரந்து விரிந்து வரும் சூழலில் அயல்நாட்டு அறிஞர் ஒருவரின் புறப்பார்வையில் அமைந்த இந்த நூலின் மொழிபெயர்ப்பு தமிழாய்வுக்குப் புதிய ஆக்கத்தை சேர்ப்பதோடு புது ஆய்வுகளுக்கு வழிகாட்டியாகவும் அமையும்.
இந்த நூல் சங்க இலக்கியத்தில் காணப்படும் வாய்பாட்டு தொடர்களைத் தொகுத்துக் கொடுத்து அவை இலக்கிய ஆக்கத்திற்கு பயன்படும் விதத்தை சுருக்கமாக ஆராய்கிறது.தமிழில் செவ்வியல் இலக்கிய ஆய்வுக்கு ஒரு வழிகாட்டியாக அமைகிறது.இது சங்கத்தமிழ் ஆய்வாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்.
- செ.வை.சண்முகம்
வாச்சக் அவர்களின் நூல் கைலாசபதி தொடங்கி வைத்த சங்க இலக்கியத்தின் அடிப்படையான வாய்பாட்டு அமைப்பு பற்றிய ஆய்வை மேலும் முன்னெடுக்கிறது.பல பக்கம் செல்லும் இன்றைய பழந்தமிழாய்வு மேல்நாட்டு ஆய்வாளர் ஒருவரால் புதிய பாதைக்குத் திருப்பப்படுகிறது.
- தமிழவன்
Be the first to rate this book.