7 கோடி தமிழர்களில் 109 வரிகள் உள்ள ஆத்திசூடியின் அகர வரிசையான முதல் 13 வரிகளை சொல்லத் தெரிந்த தமிழர்கள் எத்தனைப் பேர் இருக்கக்கூடும் என்று யோசிக்கவே அச்சமாக உள்ளது. எனவே இக்கதைகளைப் பெரியவர்கள் படித்துச் சிறியவர்களுக்கும், சிறியவர்கள் படித்துப் பெரியோர்களுக்கும் சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லிச்சொல்லி மகிழ்ந்து மகிழ்ந்து தமிழ்க் குடும்பங்களில் தமிழ் மணம் கமழ வேண்டும். அந்தத் தமிழ் மணத்தில் தமிழ்த்தாயும் மனமகிழ்ந்து, தன் இலக்கியச் செல்வங்களின் மூலம் தமிழர்களின் வாழ்வில் நன்நெறிகளை விதைத்து, உலகிற்கே வழிகாட்டும் உயர் மனிதர்களாய் வாழத் தமிழர்களுக்கு அருள் செய்ய வேண்டும். தன் வேர்களைப் பற்றிக் கவலை கொள்ளாத தமிழ் சமூகத்திற்கு அதன் பெருமைகளை இந்தக் கதைகள் மூலம் சொல்ல விழைகிறார். இது உங்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்க ஒரு உன்னத நூலாகும்.
Be the first to rate this book.