நம் சமூகத்திற்கு பாலியல் கல்வி தேவையா? பாலியல் கல்வி கொடுப்பதன் மூலம் பாலின சமத்துவம் மேம்படுமா? பாலியல் குற்றங்கள் குறையுமா? இல்லை பாலியல் கல்வி அவசியமற்றது, பாலியல் எப்போதும் போல் நம் சமூகத்தில் மறைபொருளாகவே இருக்க வேண்டும்.
இது போன்ற சிந்தனைகள் ஒரு புறமிருக்க இந்த நாவலை என் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து எழுதியிருக்கிறேன். இந்த நூல் என்(ஆண்) பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கும்.
பாலியல் தொடர்பாக ஒரு ஆண் நம் சமூகத்தில், சமூகத்தால் எவ்வாறு வளர்கிறான், வளர்க்கப்படுகிறான் , எதிர் பாலினம் பற்றிய அவனின் புரிதல்களை எவ்வாறு அவன் அறிந்திருக்கக்கூடும் சமூகம் அதற்கான சாதனமாக எதை கொடுத்திருக்கிறது. சற்று சிந்தித்துப் பார்த்தால் ஒன்றுமேயில்லை. என் முப்பது வருடத்தில் பாலியல் பற்றி பாலினம் பற்றி இதுவரை நண்பர்களுடன் கூடிய ஆபாசப் பேச்சுகளை தவிர வெளியில் அறிவார்ந்து ஒருமுறைக்கூட பேசியதோ கேட்டதோயில்லை.
இந்நிலையில் ஒட்டு மொத்த சமூக உளவியலுக்கும் அதன் மேம்பாட்டிற்கும் பாலியல் குறித்தான வெளிப்படை அறிவார்ந்த பேச்சுகளும் புரிதல்களும் தேவை என நினைக்கிறேன். இந்த நாவல் பதின் பருவம் தொட்டு ஒரு ஆண் முதல் குழந்தை பெறும் வரை அவனின் காமம் மற்றும் எதிர் பாலினம் குறித்த அவனின் பிம்பங்களை மாயைகளை எதார்த்தங்களை புரிதல்களை பேசும்.
அவனின் பதின் உலகம் ஆபாச வார்த்தைகளால் நிறைந்து கிடக்கிறது. அவனின் கல்லூரி காலம் உடல் மீதான இச்சைகளால் மூழ்கி கிடக்கிறது. அவனின் இளமை காலம் காமத்திற்கும் காதலிற்கும் இடையே விரிக்கப்பட்டிருக்கும் மாய ரேகையில் பயணிக்கிறது.
நூலை வாசிக்கும் வாசகருக்கு ஆணின் பள்ளி கல்லூரி வாழ்க்கையில் ஆபாச காம நிகழ்வுகளை தாண்டி வேறேதும் இல்லையா என கேட்க கூடும். நிச்சயம் சரி தான். ஆனால் நாவலின் கதையும் கருவும் கதாப்பாத்திரத்தின் காம உளவியல் பற்றி பேசுபவை.
“சாண்ட்விச்” தற்போதைய சூழலில் மிக முக்கியமான நூல் என கருதுகிறேன். நூலை வாசிப்போருக்கு புதிய சிந்தனைகளை கொடுக்குமென நம்புகிறேன்.
3 எழுத்து பிழைகள் உள்ளன.
நல்ல புத்தகம். நல்ல வாசிப்பு அனுபவம். ஆனால் சில இடங்களில் பக்கங்கள் மாத்தி மாத்தி அச்சிடப்பட்டுள்ளதாக நினைக்கிறேன்.
Ambigaikumar D 18-06-2022 04:11 pm
5
கதையின் வடிவமைப்பு புதிதாக இருந்துது. காதல் பற்றி ஆசிரியர் எழுதியிருப்பது நேர்த்தியாக உள்ளது.
Ranjitha 24-01-2022 11:01 am
5 இன்றைய சூழலுக்கான புத்தகம்
எதார்த்தமான காதல் கதை.
sivaranjani R 24-01-2022 10:21 am